thanush

சினிமாக்கள்தான் சர்ச்சையை உண்டுபண்ணுகின்றன என்றால், இப்போது விளம்பரங்களும் சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டன. “பொண்ணுங்களை பெத்தாலே டென்ஷன்தான்” என்று ஒரு விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் பேச.. பெண்ணுரிமை போராளிகள் கொதித்தெழுந்தார்கள். அடுத்ததாக துணிக்கடை விளம்பரம் ஒன்றில் கமல், தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்று கூற.. அதற்கு பகுத்தறிவுவாதிகள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் தனுஷ்.

டி.டி.ஹெச். விளம்பரம் ஒன்றில் அவர் பேசும் வார்த்தைகள், தங்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொங்கியிருக்கிறார்கள். “அந்த விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். தனுஷ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கோரினார்கள். ஆனால் தனுஷ் இதை கண்டுகொள்ளவில்லை. மன்னிப்பு கேட்காவிட்டால் தனுஷ்வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

“தொடர் மழையாக இருக்கிறது என்பதால் போராட்டத்தை தள்ளிவைத்திருக்கிறோம். மழைவிட்டதும் நிச்சயம் முற்றுகை போராட்டம் நடத்துவோம்!” என்கிறார்கள்.

மழைவிட்டும் தூவானமும் விட்டுவிடும்..   இந்த போராட்டங்கள் விடாது போலிருக்கிறது!