சமீபத்தில் தனது “தங்க மகன்’ திரைப்பட வெளியீட்டை ஒட்டி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தனுஷ், “‘காக்கா முட்டை’ போன்ற தரமான படங்களை தயாரிக்க வேண்டும். தவிர திறமையானவர்களைக் கண்டுபிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நான் படத்தயாரிப்பு நிறுவனம் துவக்க காரணம்” என்றார்.
சரி, நல்ல நோக்கம்தான். ஆனால் அடுத்து அவர் சொன்னதுதான் பிரச்சினை ஆகிவிட்டது.
“சிவகார்த்திகேயன் மீதுள்ள கோபத்தில்தான் விஜய்சேதுபதியை நீங்கள் வளர்த்து விடுவதாக சொல்கிறார்களே…?” என்று பத்திரிகையாளர்கள் கொக்கி போட, “சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. உண்மையென்னவென்றால் எங்கள் நிறுவனத்தால் சிவகார்த்திகேயனுக்கு இன்றைய மார்க்கெட்படியான சம்பளத்தைக் கொடுக்க முடியவில்லை. சிவாவும், நானும் இன்றும் நல்ல நண்பர்கள்தான். அவர் வளர்வதில் எனக்கும் பெருமைதான்” என்றார் தனுஷ்.
அதாவது தனது நெருங்கிய நண்பரா இருந்த, தன்னால் ஆளான சிவகார்த்திகேயன் தற்போது தன்னிடமே அதிக சம்பளம் கேட்கிறார் என்கிற தொணியில் பதில் அளித்தார்.
இதுதான் சிவகார்த்திகேயனை காயப்படுத்திவிட்டது. “தனுஷ் மட்டும் தன் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் வாங்காமல் குறைத்தா வாங்குகிறார். அவர் எனக்கு செய்த உதவிக்கு நானும் பதிலுக்குச் செய்திருக்கிறேன். இந்த நிலையில் இப்படி அவர் பேசுவது நியாயமா” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் புலம்பி வருகிறார் சிவகார்த்திகேயன்