ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கு தடைவிதித்த மத்திய அரசின் செயலைக் கண்டித்து, மார்ச் 2ம் தேதி சனிக்கிழமை, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தலைமையில், அவரின் பிடிபி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தடையை அடுத்து, மாநிலம் முழுவதிலுமுள்ள அந்த இயக்கத்தின் சொத்துக்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

சமீபத்தில், அம்மாநிலத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் மீது, புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்விளைவாக, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ், ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தை மத்திய அரசு தடைசெய்தது.

அந்த இயக்கத்தின் சுமார் 150 தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்துதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

– மதுரை மாயாண்டி