பஞ்சாப் மாநில சட்சமன்றத் தேர்தலில் அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று “சி ஓட்டர்” என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது.
117 உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்து விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது முதல்வராக பாதல் இருக்கிறார். அவரது கட்சியுடன் பா.ஜ.கவும் கூட்டணி வைத்திருக்கிறது.
சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில் இன்னும் ஒன்பது மாதம் தேர்தல் இருக்கும் நிலையில் ஆம் அத்மி கட்சி 80 முதல் 90 இடங்கள் கைப்பேற்று என்று கணித்துள்ளது. காங்கிரஸ் 15 முதல் 20 இடங்கள் கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது. கடந்த டில்லி சட்டமன்ற தேர்தலில் நடந்தது போல, இங்கு பஞ்சாபில் பாதல் – பாஜக கூட்டணி அதளபாதாளத்தில் வீழும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஆனால் ஆம்ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கும் பட்சத்திலேயே இந்த நிலை. அக் கட்சி சார்பாக வேறுயாராவது முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிலைமை மாறும். அப்போது காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். அக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர் சிங் முதல்வராக வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தரப்பில் தற்போது டில்லி துணை முதல்வராக இருக்கும் சிஸ் ஓடியவை, முதல்வராக்கிவிட்டு, கெஜ்ரிவாலை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுதும் பெரும் தோல்வி ஏற்பட்ட போதும் பஞ்சாபில் நான்கு எம்.பிக்கள் கிடைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.