meteorite
வேலூர்:
வேலூரில் டிரைவர் இறப்புக்கு காரணம் விண் கல்லா? அல்லது வெடி விபத்தா என்ற குழப்பம் நீடிக்கிறது.
வேலூர் அருகே நாட்றாம்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பேருந்து ஓட்டுனர் காமராஜ் என்பவர் இறந்தார். வானத்தில் இருந்து வந்த விண் கல் வெடித்து சிதறியதில் தான் காமராஜ் இறந்ததாக போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு, இழப்பீட்டு தொகையை அறிவித்தார்.
‘‘ விண் கல் தாக்கி இது வரை யாரும் இறந்தது கிடையாது. அப்படி காமராஜ் இறந்திருந்தால் இது தான் முதல் சம்பவமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்கள் இன்னும் இது குறித்து உறுதியான முடிவை அறிவிக்காத நிலையில் தமிழக அரசு விண் கல் தான் காரணம் என்ற முடிவுக்கு வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது’’ என விஞ்ஞாணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சம்பவ இடத்தை ஆய்வு செய்த தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் வெடி பொருட்கள் சிதறல்கள் எதையும் கைப்பற்றவில்லை. இதனால் சம்பவத்தில் வெடி பொருட்கள் எதுவும் வெடிக்கவில்லை என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.
மேலும், இறந்த டிரைவரின் பிரேத பரிசோதன அறிக்கை வெளியான பிறகு தான் அவரது இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிதறல்களை போலீசார் சேகரித்து பெங்களூருவில் உள்ள இந்திய வின்இயற்பியல் மைய நிபுணர்கள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.