டில்லி:
கடந்த ஆண்டின் மிக மோசமான முதல்வர் பினராயி விஜயன் என்று சமுக வலைதளமான கூகுளில் தகவல் வெளியாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் முட்டாள் என கூகுளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத் திய நிலையில், தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தியாவின் மோசன முதல்வர் என கூகுளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது கேரள அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தேடுதல் தகவல் தளமான கூகுள் இணையதளத்தில் அவ்வப்போது சர்சைக்குரிய தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இணைய தளம் சர்வ அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் சர்ச்சைகளும் தலைதூக்கி வருகின்றன.
சமீப காலமாக கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதால், உலகம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள் கேரள மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கூகுள் இணையதளத்தில் இந்தியாவின் மோசமான மாநில முதல்வர் யார்? என்று தேடினால் அதில் முதல்வதாக வருவது கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர்தான்.
இந்த தகவல் கேரள மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு தொடர்ககள் கூகுள் இணையதளம் மீது கடும் கோபமாக உள்ளர்கள். அதே வேளையில் பாஜக போன்ற எதிர்க்கட்சியினர் இதை வரவேற்று உள்ளனர்.
தற்போது கேரளாவில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.