1

ற்போது வாட்ஸ்அப்பில்  பரபரப்பாக பகிரப்படும் படம் இது.  அதோடு, “திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் மதுக்கடை வாசலில் செத்து கிடந்த போது மதுக்கடை ஊழியர்களும் மது அருந்த வந்த குடி மன்னர்களும் கண்டும் காணாமல் இருந்ததது தான் வேதனை”   என்ற குறிப்பும் இருக்கிறது.

சந்தேகத்தின் பேரில், அந்த புகைப்படத்தை  உற்று கவனித்தோம். அதில் கடை எண், வேண்டுமென்றே நீக்கப்பட்டிருந்ததுபோல் தோன்றியது. அடுத்து, திருவான்மியூர் காவல் நிலையத்தை தொடர்புகொண்டோம். “அதுபோல் ஏதும் தகவல் இல்லை. ஆனாலும் விசாரித்துச் சொல்கிறோம்” என்றார்கள்.  மீண்டும் நாம் தொடர்புகொண்டபோது, “அது பொய்யான தகவல். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை” என்றார்கள்.

குறிப்பிட்ட அந்த மனிதர், அதீத போதையில் டாஸ்மாக் மதுக்கடை வாசலில் மயக்கத்தில் கிடந்திருக்கலாம் என்றும், அதை அவர் மரணமடைந்துவிட்டதாக  வாட்ஸ்அப்பில் யாரோ பரப்பியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.