astrology_symbol-satyam1
அனைத்து ராசி நேயர்களே…!
ஜோதிடத்தில் நட்சத்திரங்கள் ராசிகள் கிரகங்கள் லக்கினங்கள் வைத்தும் திசா புத்திகளின் அடிப்படையிலும் ஜோதிட பலன் சொல்லப்பட்டு வருகிறது ஆனால் இன்றைய காலகட்டங்களில் அனைத்து கிரகங்களையும் விட ராகு,கேதுக்களே பலம்பெற்று விளங்குகிறது . சர்ப்பதோசம் காளசர்ப்பதோசம் காளசர்ப்ப யோகம் என்ற அடிப்படையில் ஜோதிடப்பலன்கள் கணித்து சொல்வதே சரியாக இருக்கிறது இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
காளசர்ப்பம் தோசம்//யோகம் … ஒருவர் 38வயதுவரை அவர் ஜாதகத்தில் யோகமான திசைகள் நடந்தாலும் அந்த ஜாதகர் பல வழிகளில் துன்படுவாராயின் அவர் 38வயதுக்கு மேல் காளசர்ப்ப யோகத்தை அனுபவிப்பர் தீடிரென யோகங்களால் அவர் பொருளாதாரத்தின் நல்ல நிலைமைக்கி செல்வார்
அதே வேளையில் அவருக்கு காளசர்ப்பம் தோசம் இருந்து இளவயதில் பொருளாதாரம் போன்ற நல்ல நிலைமைக்கி ஆளாகியிருந்தால் அந்த ஜாதகரின் வாழ்க்கை 38வயதுக்கு மேல் வீழ்ச்சியடையும் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் சிலருக்கு உயிர் இழப்புகள் கூட ஏற்படும்.
எனக்கு தெரிந்த சில பெயர்களை சொல்வதைவிட உங்கள் அனைவருக்கும் தெரிந்த சில காளசர்ப்ப தோசம்/யோகம் உள்ளவர்களின் சில பெயர்களை சொல்கிறேன் 1.இளையராஜா 2.பாக்கியராஜ் 3.சிவாஜி 4.ரஜினி 5.கருணாநிதி
இவர்கள் அனைவருக்குமே காளசர்ப்பம் அமைப்புள்ள ஜாதகம்
இவர்கள் தங்கள் இளமைக்கால வாழ்க்கையை போராட்டமாகவே கழித்தனர் ஆனால் அதன்பின் புகழ்,பொருளாதாரத்தின் உச்சிக்கே சென்றனர்
வசதிவாய்ப்புள்ள குடும்பத்தில் பிறந்த நேருவின் ஜாதகமும் காளசர்ப்பமே.  வசதிகள் இருந்தும் அவர் இளமைக்கால வாழ்க்கை போராட்டம்,ஜெயிலிலையே கழிந்தது ஆனால் பின் இந்தியாவின் முதல்பிரதமர் என்ற புகழ் வந்தது
காளசர்ப்பம் தோசம்/யோகம் இருக்கிற ஜாதகம் இளவயதில் புகழை கொடுத்தால் என்ன செய்யும் ? ராஜிவ்காந்தி அவரகளுக்கு காளசர்ப்ப தோசமே இளவயதில் பிரதமர் என்ற புகழ் வந்தது ஆனால் அதுவே அவரின் உயிருக்கு எமனாகிவிட்டது சஞ்சய்காந்தி ஜாதகமும் அப்படித்தான் இவர்.  ராஜிவ்காந்தியாவது பிரதமர் ஆனவுடன் புகழ் வெளிச்சம் வந்தது இவர் அதற்குமுன்னரே வெளிச்சத்திற்கு வந்தார் அவரும் இளவயதில் மரணமடைந்தார் எனவே ஒருவரின் ஜாதகத்தில் ராகு,கேதுக்களே முக்கியப் பங்காற்றுகின்றன.!
அவ்வப்போது ஜோதிட விஞ்ஞானம் பற்றி பேசுவோம். அதே போல வாரா வாரம் செய்வாய்க்கிழமை மாலை, 12 ராசிகளுக்கும் வார ராசிபலன் அளிக்க இருக்கிறேன்.
இன்று மாலை  ஆறு மணிக்கு, உங்கள் patrikai.com  இதழில் படியுங்கள்!
அன்புடன்,
“துல்லிய ஜோதிடர்”  திலக்