கோவி லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு:
அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா பேசிய மேடையில் சபாரி போட்டிருந்த ஒருவர் சற்று தள்ளி நின்று கொண்டு அடிக்கடி கை தட்டினார். இது அங்கு திரட்டப்பட்டிருந்த கூட்டத்திற்கான சிக்னல்.
அதாவது, சுட்டெரிக்கும் வெயிலில் வெட்ட வெளியில் உட்கார்ந்திருக்கும் மக்கள் ஜெ. பேசுவதை கவனித்து கேட்க மாட்டார்கள்; புரிந்து கொள்ள மாட்டார்கள்; கை தட்டவும் மாட்டார்கள். ஜெ தனது பேச்சினூடே சற்று இடைவெளி விடுவார். அல்லது ஏதாவது ஒரு வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துப் பேசுவார். அப்போதெல்லாம், கூட்டம் கை தட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
குறிப்பிட்ட அந்த நேரத்தில் கை தட்டாமல், இஷ்டத்துக்கும் கை தட்டினால் எரிச்சல் அடைவார்.
அதனால், மக்கள் எந்த நேரத்தில் கை தட்ட வேண்டும் என்பதை உணர்த்தும்விதத்தில் அந்த சபாரி நபர் கைதட்டிக் காட்டுவார். அவர் கைகளை உயர்த்தி தட்டும் போது கூட்டமும் அவரை பின்பற்றி கை தட்ட வேண்டும்.
மேடைக்கு கீழே பக்கவாட்டில் அமர்ந்திருந்த உடன் பிறவா சகோதரி சசிகலாவும் கூட, சபாரி நபரின் வழிகாட்டுதலின் படியே கை தட்டினார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் இது போன்ற நுட்பமான ஏற்பாடுகளையும் கவனிக்க முடிந்தது.
(இன்று வெளியாகியுள்ள நக்கீரன் இதழில்)