ஜெர்மன் அகதிகள் முகாமில் அவதியுற்ற இந்திய பெண் மகளுடன் மீட்பு
டெல்லி:
சமூக வளைதளங்கள் மூலம் பல அறிய விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. நேரில் தொடர்பு கொள்ள முடியாத நபர்களை கூட டுவிட்டர், பேஸ்புக் மூலம் தற்போது தொடர்பு கொள்ள முடிகிறது. இதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..
ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரை சேர்ந்த குர்ப்ரீட். இவர் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்துடன் ஜெர்மனிக்கு சென்றார். இவருக்கு தற்போது 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தற்போது ஜெர்மனி அகதிகள் முகாமில் மகளுடன் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தியாவுக்கு என்னை மீட்டு வந்தவுடன் முழு விபரங்களையும் தெரிவிப்பதாக கூறி ஒரு வீடியோவை சமூக வளைதளங்களில் பதிவிட்டார். இந்தி மொழியில் இவர் அதை தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடனடியாக ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி, குர்ப்ரீட் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவரையும், அவரது மகளையும் மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க தூதரக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த தகவலை சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இருவரையும் இன்று இந்தியாவுக்கு அனுப்பி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தனது மகளும், பேரக்குழந்தையும் மீட்க நடவடிக்கை எடுத்த வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் தூதரக அதிகாரிகளுக்க இந்தியாவில் உள்ள குர்ப்ரீட்டின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.