
விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நான்கு பேர் பலியானதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் வைகோ குற்றச்சாட்டினார். துறைமுகம் தொகுதியில் மதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து பேசிய வைகோ, ’’இது என்ன இடி அமீன் சர்க்காரா? லேடி இடி – அமீனா ஜெயலலிதா? இது என்ன ஹிட்லர் சர்க்காரா? லேடி ஹிட்லரா ஜெயலலிதா? இது என்ன முசோலினி சர்க்காரா? லேடி முசோலினியா ஜெயலலிதா?
இந்த நாலு பேர் சாவுக்கு நீங்கதான் காரணம். உங்களை நான் கொலைகாரி என்று சொல்வேன். வழக்கு போடுங்க. ஜெயலலிதா ஒரு கொலைகாரி என்பதை நேரடியாக குற்றம்சாட்டுகிறேன்’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel