FotorCreated787
 
சொத்துக்குவிப்பு வழக்கில் இன்றைய வாதங்கள் ! –
நீதிபதிகள் – முகாந்திரமே இல்லாமல் எப்படி உங்கள் தரப்பு வாதங்களை ஏற்பது ?
அன்பழகன் தரப்பு – அன்பழகன் தான் இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்ற கோரி வழக்கு தொடுத்தார்.
நீதிபதிகள் – வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி வழக்கு தொடுத்தீர்கள் என்பதற்காக உங்களை இந்த வழக்கோடு இணைத்துக்கொள்ள இயலுமா ? மேல்முறையீடு செய்ய என்ன முகாந்திரம் வைத்துள்ளீர்கள் ? தீர்ப்பால் எந்த வகையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் ? – அன்பழகன் தரப்பு – தீர்ப்பினால் நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமுமே பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குற்றவாளியை விடுதலை செய்ததை எதிர்க்கவே நினைக்கின்றோம்.
ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வர ராவ் – அன்பழகன் தரப்பு வாதங்களை முன் வைக்க என்ன முகாந்திரம் உள்ளது என்பதை அவர் தெரிவிக்க முடியுமா ?
நீதிபதிகள் – உங்கள் போக்கிற்கு வழக்கில் யாரை வேண்டுமானாலும் வாதங்களை வைக்க அனுமதிக்க முடியாது. இந்த வழக்கில் வாதங்களை வைக்க உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது என்பதை நீங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கும் வரை உங்கள் வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. மேல்முறையீடு செய்ய என்ன முகாந்திரம் உங்களிடம் உள்ளது ? தீர்ப்பினால் எவ்வாறு நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீதிமன்றத்தில் நீங்கள் தெரிவிக்காத பட்சத்தில் தீர்ப்பு வழங்கும்போது உங்கள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். வைத்த வாதங்களையே மீண்டும் மீண்டும் அன்பழகன் தரப்பில் வைக்கப்படுவதை கேட்டு நேரத்தை வீணடிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாதங்களை தொடங்கலாம்.
நாகேஷ்வர ராவ் – இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கு தெரித்துள்ளது போல எந்த சொத்துக்களும் குவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 2491 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட ஆவனங்ளை நீதிமன்றத்தில் சமர்பிக்கின்றோம். இதை நீதிமன்றம் ஆராயவேண்டும். வாதங்களை வைக்க 3 நாள் அவகாசம் தேவைப்படுகிறது. – நீதிபதிகள் – இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள ஆவனங்களை நீதிமன்றம் பரிசீலிக்கும். ஆவனங்களை நீதிமன்றம் ஆராயும். வாதங்களை வைக்க ஏப்.4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. ஏப். 5ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஏப்.5ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைக்கலாம்.