lemon

சிலருக்கு இந்த மழை காலத்தில் சளி பிடித்தால் எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் தீராது.

அவர்களுக்கு ஒரு எளிய வழி.

மூன்று எலுமிச்சை பழங்களை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு இட்டு, நன்றாக கொதிக்க வையுங்கள். அதாவது இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க வேண்டும்.

பிறகு அந்த எலுமிச்சை பழங்களை பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.

காலையில் சளி வெகுவாக குறைந்திருக்கும்! தொடர்ந்து மூன்று நாட்கள் இதே போல் செய்ய.. சுத்தமாக சளித்தொல்லை நீங்கும்.