சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது எதிர்த்து,  ஐ.பெரியசாமி, அவரது குடும்​பத்தினர் தாக்​கல் செய்த மேல்முறையீட்டு மனுக்​களை உச்​ச நீ​தி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

கடந்த 2006-2011 காலத்தில் மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி ஆட்சி காலத்தில்   வீட்டு வசதித் துறை அமைச்​ச​ராக பதவிவகித்த ஐ.பெரியசாமி, வருமானத்துக்கு அதி​க​மாக ரூ.2 கோடியே 1 லட்​சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்ட​தாக லஞ்​சஒழிப்பு போலீ ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.  இதன் அடிப்​படையில் அமலாக்​கத் துறை​யும் அமைச்​சர் ஐ.பெரியசாமி உள்​ளிட்​டோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தது.

இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள்,   ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்​தில்​கு​மார் எம்எல்ஏ, மகள் இந்​திரா உள்​ளிட்​டோர் வீடு​கள் மற்​றும்  எம்​எல்ஏ அலு​வல​கங்​களில்  சோதனை நடத்தி சொத்து ஆவணங்​கள், முதலீடு​கள், வங்கிக் கணக்கு விவரங்​களை பறி​முதல் செய்​தனர்.   அதன் தொடர்ச்​சி​யாக அமைச்​சர் மற்​றும் அவரது குடும்​பத்​துக்​குச் சொந்​த​மான சொத்​துகளை முடக்​கம் செய்​வது தொடர்​பாக அமலாக்​கத் துறை நோட்​டீஸ் பிறப்​பித்​தது.

இதனை ரத்து செய்​யக் கோரி​யும், அமலாக்​கத் துறையின் வழக்கு விசா​ரணைக்கு தடை ​வி​திக்​கக்​கோரி​யும் அமைச்​சர் மற்​றும் அவரது குடும்​பத்தினர் சார்​பில் வழக்கறிஞர்​கள் ரித்துராஜ் பிஸ்​வாஸ் மேல்​முறை​யீடு மனுக்​களை தாக்​கல் செய்​தார்.

இந்த மனுக்​கள் மீதான விசாரணை  உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, சதீஷ் சந்​திர சர்மா அடங்​கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது பெரியசாமி  சார்​பில் மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி ஆஜராகி, சொத்து குவிப்பு வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதிக்க வேண்டும் என்றும்,  அமலாக்​கத் துறை வழக்கு விசா​ரணை விஜய் மதன்லால் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​புக்கு எதி​ராக உள்​ளது என வாதிட்​டார்.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, தங்களது மேல்​முறை​யீட்டு மனுவை திரும்பப் பெற அனு​மதி அளிக்கும் பெரியசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று, மேல்முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்தனர்.

[youtube-feed feed=1]