Untitled-3
சென்னை அருகே உள்ள  இந்துஸ்தான் பல்கலைகழக தனியார் பல்கலைகழகத்தை, அங்கு படிக்கும் மாணவர்கள் இன்று அடித்து உடைத்தனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூரில்  தனியார் நடத்தும்  ஹிந்துஸ்தான் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும்  மாணவர்களிடம், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை நிர்வாகம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.   இதையடுத்து  கடந்த வாரம் ஐநூறுக்கும்  மேற்பட்ட மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஆனாலும்  கல்லூரி நிர்வாகம் கட்டணத்தைக் குறைக்கவில்லை. தவிர  எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து இன்று மீண்டும் மாணவர்கள், நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டு திரண்டனர். ஒரு கட்டத்தில்,  பல்கலைகழக கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள், மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் அனைத்து மாணவர்களையும் பல்கலைகழக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் பல்கலைகழக நிர்வாகத்தின் தரப்பில், மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.