விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ’24’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று தகவல் வெளியானது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில்தான் பெரும்பாலும் நடந்தது. மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவி்த்திருந்தார் சூர்யா. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளும் துவங்கிவிட்டன. ஆகவே முன்பே சொன்னபடி பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது. ஆகவே ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’, ‘அரண்மனை 2’ ஆகிய படங்கள் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.