புதுடெல்லி:

சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளதால், 100 ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களை மூட நேரிடும் என அதன் தயாரிப்பாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து இந்திய செல்லுலார் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2020 ம் ஆண்டுக்கான சுங்கவரியை குறைக்க வேண்டும்.

ஸ்மார்ட் போன்களின் எல்ஸிடி அசெம்ப்ளி, வைப்ரேட்டர் மோட்டார். டச் பேனல் ஆகியவற்றுக்கு 12.5 சதவீதம் சுங்க வரி விதிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஸ்மார்ட் போன் தயாரிப்பு தொழிலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடு முழுவதும் மொத்தம் 127 ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

சுங்கவரி உயர்த்தப்பட்டால் இதில் 100 தயாரிப்பு நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.