பன்றி

 

 

புதுடில்லி:

டில்லயில் உள்ள பிரபலமான செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் கேரள மாநில கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆஷ்லி நெப்,  இவர், ஐந்து பேருக்கு பன்றி இறைச்சி  வாங்கித் தரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

 

q

மாட்டிறைச்சி வைத்திருந்ததான சந்தேகத்தில் தாத்ரியில் அப்பாவி முஸ்லீம் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தனது வருத்தத்தினை முகநூலில் தெரிவித்திருக்கும் நெப், தான் ஒரு முஸ்லீம், பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை ஆனால் விரும்புவோருக்கு அதனை சாப்பிடும் உரிமை இருக்கிறது என தான் உறுதியாக நம்புவதாகவும், தனது கொள்கையினை நிலைநாட்டும் வகையில் யாராவது ஐந்து பேருக்கு பன்றி இறைச்சி வாங்கித்தர முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

விரும்புவோர் தன்னைத் தொடர்பு கொண்டால் முதல் ஐந்து பேருக்கு பன்றி இறைச்சியுடனான மதிய உணவை வழங்குவேன் என்கிறார் அவர். எல்லோருக்கும் வாங்கித் தர வசதி இல்லை, டில்லிக்கு வெளியே வாழ்வோருக்கு அவ்விருந்து அளிப்பதும் சாத்தியமில்லை,  எனவே டில்லிவாசிகள் ஐவருக்கு மட்டும் என்றும் விளக்கியிருக்கிறார் நெப்.

இந்தியாவில் பன்றி இறைச்சி தடை செய்யப்படவில்லை, யாரும் அதனை உண்டதற்காகக் கொலை செய்யப்படவில்லை, ஆனாலும் ஜனநாயகத்தில் அவரவர் விருப்படி வாழவும் உண்ணவும் உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவே இந்த முன்முயற்சி, இந்த பன்முகத்தன்மையை நாம் இழப்போமானால் இந்தியா நாசமாகிவிடும் எனவும் எச்சரிக்கிறார் ஆஷ்லி நெப்!

 

–  த.நா.கோபாலன்