troops
பாக்தாத்:
சிரியாவில் உள்நாட்டு யுத்தம்  நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பிய மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு  அகதிகளாக சென்றவண்ணம் இருக்கிறார்கள்.
 இந்த நிலையில் திடீரென,  ரஷ்ய ராணுவ துருப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் ஈரான் உதவியோடு சிரியாவில் களமிரக்கபட்டுள்ளது.
இதன் உள்நோக்கம் என்னவென்று அறியமுடியாமல் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குழம்பிபோய் உள்ளன.
சமீபத்தில்  அணு ஆயுத தயாரிப்பு குறித்து அமெரிக்கா ஈரான் இடையே  ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் சுமுகமான உறவு ஏற்பட்டது. இந்த நிலையில்,  ஈரான்  ரஷ்யாவின் ராணுவ துருப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்களை தனது நாட்டில் இறங்க அனுமதித்துள்ளதோடு, சிரியாவில் தளம் அமைக்கவும் உதவி உள்ளது பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.