2a

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆகவே மீண்டும் லீ சியென் லூங் பிரதமராகிறார். தனது டிவிட்டர் பக்கத்தில், “வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் அன்றாடச் செலவினம், வேலைக்காக வரும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

புதிய குடியேறிகள், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்காக வருவோரால், சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்படும் வேலை மற்றும் தொழில் போட்டி, விலைவாசி உயர்வு போன்றவை ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு எதிரான அம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதையெல்லாம் கடந்து ஆளும் கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது. 89 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 83 இடங்களை ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

2வ

வெற்றி கிடைத்திருப்பதற்கு பிரதமர் லீ,  தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டை கட்டமைக்கும் பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.