
திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவுக்கு சென்றார். அங்கே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’தமிழகத்தில் சிந்தனை இல்லாத நிலை இருந்து வருகிறது. இந்த மாயையில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும். முதல்வர் கனவோடு சிலர் வலம் வருகின்றனர். அது கனவாகதான் இருக்கும்.
சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று ஒரு கட்சி கூறி வருகிறது. சினிமாக்காரர்களும் மனிதர்கள்தானே. அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? எல்லா பிரிவினரையும் அரவணைத்துச் செல்லும் நிலைமை அக்கட்சியினரிடையே வர வேண்டும்.
பாஜக-தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஆனால், பேரம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபற்றி வைகோ தெளிவாகச் சொல்லிவிட்டார். தமிழகத்தில் மக்களின் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கபோகிறது’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel