நடிகர் விஜய்சேதுபதி நடிக்க அருண்குமார் இயக்கி வரும் சிந்துபாத் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டது.

சிந்துபாத் படத்தின் டீசர் வரும் 11ம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . தவிர, விஜய்சேதுபதி, அஞ்சலி இணைந்து இருக்கும் புதீய போஸ்டரும் வெளிவந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை வாசன் மூவீஸ் கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.