sarath

டிகர் சங்க தேர்தலில் ஊழல் புகார், அடாவடி பேச்சு, கொலை மிரட்டல் என்று ஆக்ரோசமாக போய்க்கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் “தமிழுணர்வை” கிளப்பி தனது கணவர் சரத்குமாரை வெற்றி பெற வைக்க நினைத்தார் ராதிகா.

தனது பேட்டியில் எதிரணிக்காரரான விஷாலை, “விஷால் ரெட்டி, விஷால் ரெட்டி” என்று ரெட்டிக்கு அழுத்தம் கொடுத்து உச்சரித்தார்.

இதையடுத்து, “ராதிகாவின் தாயார் சிங்களர்தானே.. 2009ம் ஆண்டு இலங்கை யுத்தம் நடந்துகொண்டிருந்தபோதும் சிங்கள டிவிக்களுக்கு நிகழ்ச்சிகள் தயாரித்தாரே ராதிகா” என்று பதில் குற்றச்சாட்டு வீசப்பட்டது.

அந்த குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் விதமாக, சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் தொழிலதிபரும், படத் தயாரிப்பாளருமான திரிசக்தி  சுந்தர்ராமன். இவர்,தான்  வெளியீட்டாளராக இருக்கும் “தமிழக அரசியல்” இதழில் அளித்துள்ள பேட்டியில் சரத் மீது  கூறியுள்ள பகீர் குற்றச்சாட்டுக்களில் சில:

“நடிகர் சங்க கட்டிடத்தை லீஸுக்கு தருவதாக  முதலில் என்னிடம்தான் சரத் அணியினர் பேசினர். அப்போது சங்கத் தலைவர் சரத்குமார்,  செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியரோக்கு தலா ஐந்து கோடி என மொத்தம் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டனர். நான் மறுத்ததால்தான் அதன் பிறகு எஸ்பி.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டனர்.

சுந்தர்ராமன்
சுந்தர்ராமன்

அங்கும் பெரும் தொகை லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள்.  இந்த விவகாரம் பற்றி அவர்கள் என்னிடம் நேரிலும், போனிலும் பேசிய பதிவுகள் ஆதாரமாக இருக்கின்றன.

.2010ம் ஆண்டு, தனது மார்க்கெட் அஸ்தமித்துவிட்டது என்றும் கைதூக்கி விடும்படியும் சரத்குமார் கெஞ்சினார்.  ஆகவே விருப்பம் இல்லாமல் விடியல் என்ற படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.  அந்த படத்தை வைத்து எனக்கே தெரியாமல் லேபில்  கடன் வாங்கினார் சரத். ஆகவே அவர் மீது வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வருடங்களுக்கு முன் எம்.ஆர். ராதாவை கவுரவிக்க நடிகர் சங்கம் விழா எடுத்து அதற்கு தலைமை தாங்க சரத் என்னை அழைத்தார். அதற்காக 60000 ரூபாய் ரசீது இல்லாமல் பெற்றுக்கொண்டார்.

திருநெல்வேலியில் கட்டதுரை என்பவரை காலை செய்ய முயற்சி செய்ததாக சில வருடங்களுக்கு முன்னால் சரத்குமார் பேரில் குற்றப்பதிவு செய்யப்பட்டது.  அவர் மீது பல செக் மோசடி வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. முகநூல் ட்விட்டர் சென்றால் இந்தியன் வங்கி ராயப்பேட்டை பெனிபிட் பண்ட் ஆகியவற்றில் சரத்குமார்  கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக செய்திகள் உள்ளன.

2010ல் சரத்குமார் என்னிடம், “ராஜபக்சே குடும்பத்தினருடன் ராதிகாவின் தாய் மாமா மூலமாக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ராஜபக்சேவை நேரடியாக நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். இலங்கையில் பவர் பிளாண்ட் துவங்குங்கள். ராஜபக்சே உதவுவார்”   என்றார்.

அதோடு, “உங்கள் இதழில் ஈழத்தமிழர் தொடர்பான கட்டுரைகளை வெளியிடாதீர்கள். ஈழத்தமிழர்க்கு ஒரு இன்ச் நிலம்கூட கிடைக்காது” என்றார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்”

இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ள சுந்தர்ராமன், “ சரத்குமார் மீது நான் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்திலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் மீது விஷால் அணியினர்   வைத்ததைவிட பகீர் குற்றச்சாட்டுகளை சங்கர்ராமன் கூறியிருப்பதால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.