கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி ரோடு ஆகிய ரோடுகள் ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் “ஹேப்பி ஸ்டிரீட்களாக” மாறிவிடுகின்றன.
காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை மணி வரை அந்தச் சாலைகளில் ஒன்றரை கிமீ தூரத்துக்கு, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு, மக்கள் விளையாட, சின்னச்சின்னப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
எப்போதும் வாகனப் போக்குவரத்து சுறுசுறுப்பாக இருக்கும் தெருவில் நடுவில் கிரிக்கெட், இறகுபந்து, கால்பந்து, என்று பற்பல விளையாட்டுகளும் எல்லா வயதினரும் விளையாடினால் எவ்வளவு வித்தியாசமாகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
ஏறக்குறைய மூன்று மாத காலமாக ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் இது நடைபெறுகிறது. சில பல போட்டோக்களையும் எடுத்துக்கொண்டேன். போட்டோக்களில் இருந்தே அங்கே என்னென்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம்.
வித்தியாசமான, மனதை உற்சாகப் படுத்தும் நிகழ்ச்சி.
இது போல தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யலாமே!
இள மணி