NEW EC
மிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, பொறுப்பில்  இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை மட்டும் அவர் பதவியில் தொடர்வார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சக்சேனா, 1989ல் தமிழழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.  பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர் கடந்த  வருடம் அக்டோபர் 27ம் தேதி, தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

சந்தீப் பொறுப்பேற்ற பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும்,  முதல்வர்  ஸ்ரீரங்கம் மற்றும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்களில் இவர்,  ஆளும் அ.தி.மு.க.வுக்கு  ஆதரவாக நடந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளைக் கூறின.

விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சந்தீப் சக்சேனா மாற்றப்பட்டுள்ளார்.  இந்த மாற்றம் ஆளும் அ.தி.மு.க.வுக்கு சாதகமற்ற நடவடிக்கை என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.