சத்தீஷ்கரில் 11 ஆம் வகுப்பு மாணவர்களும் ’’பாஸ்’..
உயிர்களைக் குடித்து, பொருளாதாரத்தை நசுக்கி, உலகையே புரட்டிப்போட்டுள்ள, கொரோனா-
போகிற போக்கில் சில நன்மைகளையும் செய்துள்ளது.
அதனால் பலன் அடைந்தவர்களில் மாணவ வர்க்கமும் அடங்கும்.
பல ,மாநிலங்களில் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’.
சத்தீஸ்கர் மாநில அரசு, ’ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை’ ’ஆல் பாஸ்’ என அறிவித்துள்ளது.
தவிர, 11 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதாமல், 12 ஆம் வகுப்பு செல்லலாம் என அறிவித்துள்ளார், மாநில முதல்-அமைச்சர் பூபேஷ் பகல்.
அந்த மாநிலத்தில் கடந்த 19 ஆம் தேதி முதலே பள்ளிகள் அடைக்கப்பட்டு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன
மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், ‘இந்த ‘’ஆல் பாஸ்’’ ஆர்டர்..
– ஏழுமலை வெங்கடேசன்