நேற்று சட்டசபையில் விளாத்திகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில கருத்துகளை பேச… அதற்கு சபாநாயகர் மறுக்க.. ஓரே அமளி துமளி.
நமக்கு நாமே” திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியதை ஒட்டி, பத்திரிக்கையாளர்களுக்கு ஜி.ஆர்.டி கிரான்ட் ஹோட்டலில் மிகப்பெரும், மதிய விருந்து + கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார் அல்லவா ஸ்டாலின்?
அங்கிருந்துதான் விவகாரத்துக்கு நூல் பிடித்திருக்கிறார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் என்கிறார்கள்.
சொல்லப்படுவது இதுதான்:
அதாவது, அன்றைக்கு மு.க. ஸ்டாலின் வைத்த விருந்து + சந்திப்து ஜி.ஆர்.டி. நட்டத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்ட பல பத்திரிகையாளர்கள், ஸ்டாலினிடம் சிலபல கேள்விகளை வைத்தார்கள். அதில் ஒரு இளம் பத்திரிகையாளர் , “நாற்பது வருட அரசியல் அனுபவம் வாய்ந்தவர் நீங்கள். ஆனால் அரசியல் அனுபவமே இல்லாத உங்கள் மருமகன் சொல் கேட்டு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
எதிர்பாராத இந்த கேள்வியால் அதிர்ச்சியான ஸ்டாலின், மீண்டும் கேள்வியை கூறுமாறு கேட்டிருக்கிறார். அந்த பத்திரிக்கையாளரும் மறுபடி கேள்வியை கூறியிருக்கிறார்.
சில விநாடிகள் யோசித்த முக.ஸ்டாலின், பிறகு, “ஒரு கை தட்டினால் எப்படி ஓசை வரும்?. இரு கையும் தட்டினால்தானே ஓசை வரும்? அது மாதிரிதான் இதுவும். நீங்கள் எல்லோரும் எப்படி எனக்கு ஆதரவளிக்கிறீர்களோ, அதே போலத்தான் சபரீசனும் செய்கிறார். என்னுடைய மாப்பிளை பேச்சை கேட்பதில் என்ன தவறு?”என்றும் பதில் அளித்தார்.
இந்த கேள்வி பதிலை அடிப்படையாக வைத்துத்தான் நேற்று (17.02.16) சட்டமன்ற விவாதத்தின்போது அதிமுக எம்.எல்.ஏவால் எழுப்பபட்டதாம்.
விவகாரத்தை கிளப்ப எங்கிருந்தெல்லாம் நூல் பிடிக்கிறாங்க, இந்த அரசியல்வாதிங்க!