டாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி எழுதியுள்ள ஆவேச கவிதை:
குடி குடியைக் கெடுக்கும்…
பாட்டிலில் எழுதினால் தவறில்லை. ….
பாட்டில் எழுதினால் தேசதுரோகம்..
ஊற்றிக் கொடுத்ததை ஊருக்கே சொன்ன கேப்டனுடன் கூட்டணி….
வழிமொழிந்த கோவனுக்கு தடியடி…
இலக்கு வைத்து விற்கும் சாராய வியாபாரிக்கு அமைச்சர் பதவி. …
இதை எடுத்து சொன்ன தோழர் இப்போ சிறைக்கைதி….
ஏழு வயதில் இளநீர் விற்ற உனக்கு. ..
எழுவது வயதில் சாராயம் விற்க தெரியாதா என்ன….
தாலிக்கு தங்கம் ஒருபுறம்…
தாலி அறுக்கும் டாஸ்மாக் மறுபுறம். …
அடிபணியும் அமைச்சர் ஒருபுறம்…
அடித்து உதைக்க போலிஸ் மறுபுறம்…
மோடி வித்தை காட்டும் உனக்கு,
மோசடி செய்ய தெரியாதா என்ன. …
ஒன்று மட்டும் தெரியவில்லை உனக்கு…
அநீதிக்கு எதிராக போராடும் அனைவரின் பெயரும் கோவன் என்று….!