கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு:
”கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான்
சேர்த்து பார்க்க முடியலே
அம்மா மறக்கலே
அப்பா நினைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
எங்களுக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே
கோழி ஒரு கூட்டிலே”
இது சில வருடங்கள் முன்பு எங்கள் ஊராட்சித் தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாவில் இரு சிறுமிகள் ஆடி நடித்த பாடல் வரிகள்.
இதில் நடித்த இரு சிறுமிகளின் தந்தையும் குடியால் கெட்டவர்கள்.அவர்களின் பிள்ளைகள் பாடுவதாய் அரங்கேறிய இந்தப்பாடல் உண்மையில் அவர்கள் சோகத்தை சொல்வதாகவே அமைந்தது இந்த பாடல்.
பரவலாக ஊர்மக்களாலும் பேசப்பட்டது.ஒருவேளை வேறு நல்ல தகப்பனை பெற்ற மகள்கள் இதனை பாடி நடித்திருந்தால் இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே.!
இதற்கு சரியான சிறுமிகளை தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து அரங்கேற்றிய ஆசிரியர் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்.
நல்ல வேளையாக இது ஆறேழு வருடங்களுக்கு முன்பு அரங்கேறியது.
இப்போது என்றால் தமிழகத்தின் தேசிய நதியாகிய டாஸ்மாக்கின் புகழுக்கு களங்கம் விளைவித்த குற்றத்திற்காக அந்த சின்னஞ்சிறுசுகள் மீதும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கும்.
திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” மது ஒழிப்பு மாநாட்டில் மது எதிர்ப்பு பாடலைப்பாடிய சிறுமிகள் மீதும் தேசிய பாதுகாப்புச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறதாம்.
இதைச்செய்த அரசு எம்பள்ளி மாணவிகளை மட்டும் சும்மா விட்டுவிடுமா என்ன.?