வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,530 உயர்ந்து 37,25,801 ஆகி இதுவரை 2,58,272 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,530 பேர் அதிகரித்து மொத்தம் 37,25,801 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6032 அதிகரித்து மொத்தம் 2,58,272 பேர் உயிர் இழந்துள்ளனர்.  12,41,773 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  49,249 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,798 பேர் அதிகரித்து மொத்தம் 12,37,633 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2350 அதிகரித்து மொத்தம் 72,271 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,00,626  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 16,179 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2260  பேர் அதிகரித்து மொத்தம் 2,50,561 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 185 அதிகரித்து மொத்தம் 25,613 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,54,718 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2254  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075 பேர் அதிகரித்து மொத்தம் 2,13,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 236 அதிகரித்து மொத்தம் 29,315 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 85,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1427 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 4406 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1.94,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 693 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 29,427 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2963 பேர் அதிகரித்து மொத்தம் 49,400 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 127 அதிகரித்து மொத்தம் 1693  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 14,142 பேர் குணம் அடைந்துள்ளனர்.