டில்லி:
பிரபல யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கிம்கோ செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது.
“கிம்போ” ஆப் , அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ‘காப்பி’ என தெரிய வந்ததை தொடர்ந்தும், இந்த செயலியில் பாதுகாப்பு இல்லை என்பதாலும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
பாபா ராம்தேவ் நிறுவனத்தின் பதஞ்சலி இதுவரை நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தொலைத்தொடர்பு துறையிலும் களமிறங்கி உள்ளது.
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடன் இணைந்து “சுதேதி சம்ரித்தி” என்ற சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து, இந்தியா பேசுகிறது என்ற வாசகத்துடன் “கிம்போ” என்ற புதிய மொபைல் செயலியை பிரமாண்டமாக அறிமுகம் செய்தது. “கிம்போ” செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கிம்போ செயலியை சுமார் 1லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினார். இந்த செயலியில் பாதுகாப்பு கிடையாது இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த செயலி மற்றொரு அமெரிக்க நிறுவனத்தின் செயலி என்றும் புகார் எழுந்தது.
இதுகுறித்து “கூகிள் ப்ளே” ஸ்டோருக்கு புகார்கள் வந்தததை தொடர்ந்து, அதுகுறித்து ஆராயந்த கூகுள் பிளே ஸ்டோர், பதஞ்சலியின் “கிம்போ” செயலியை அதிரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளதது. மேலும், அதன் இணையதளமான www.kimbho.com முடக்கப்பட்டது.
இதையறிந்த பதஞ்சலி நிறுவனம், தொழில்நுட்ப காரணங்களால் “கிம்போ” செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளது.