சென்னை: மது குடிக்க பணமில்லாததால் கொலை செய்தோம் என்று கொலை வழக்கில் பிடிபட்ட மூவர் தெரிவித்தனர்.
பிரபல பெண் மருத்துவர் ரோகினி, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் தனது தாயார் சுபத்ரா, மகள் ரேஷ்மி ஆகியோருடன் வசித்து வந்தார். இவர், கடந்த 7ம் தேதி அன்று தனது வீட்டின் தோட்டப்பகுதியில் கொலை செய்யப்பட்டு .
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்த மூவரை கைது செய்தனர். அவர்கள் சமீபத்தில் ரோகினி வீட்டுத் தோட்டத்தில் பணி புரிந்துள்ளனர்.
இரவு நேரங்களில் ரோகினி தனது வீட்டுத் தோட்டத்தில் நடமாடுவதை கவனித்திருக்கிறார்கள்.
மூவருக்கும் குடிப்பழக்கம் உண்டு. கடந்த 7ம் தேதி மூவரும் வழக்கம்போல மது அருந்தியிருக்கிறார்கள். மது போதை போதவில்லை என்று, பணம் திரட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
அப்போது, ரோகினி வீட்டில் சென்று திருட திட்டமிட்டு சென்றிருக்கிறார்கள். வீட்டின் முன் நடைபயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார் ரோகினியின் தலையில் கட்டையால் அடித்திருக்கிறார்கள்.
பிறகு ரோகினி அணிந்திருந்த செயின், கம்மல், செல்போன் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டனர்.
விசாரணையில், “மது குடிக்க பணமில்லாததால் பணம் பிடுங்க சென்றோம். அடித்ததில் ரோஹிணி இறந்துவிடுவார் என்று நினைக்கவிலலை” என்று கூறியிருக்கின்றனர்.
\