sarathkumar
ஆடுகளம் படத்துக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார் கிஷோர். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், பயணம், காஞ்சனா, காக்கா முட்டை, விசாரணை உள்பட பல படங்களுக்கு பட தொகுப்பாளராக பணியாற்றினார். கடந்த வருடம் உடல் நலக்குறைவால் திடீரென்று அவர் மரணம் அடைந்தார். விசாரணை படத்தில் அவருக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது தற்போது கிடைத்துள்ளது.
இதுகுறித்து கிஷோர் தந்தை தியாகராஜன், விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடையமுடியவில்லை. கிஷோர் மறைந்த பிறகு வறுமையில் கஷ்டப்படுகிறோம் என்று தெரிவித்து இருந்தார். இதுபற்றி கேள்விபட்டதும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், உடனடியாக கிஷோர் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் உதவி வழங்கினார்.