சென்னை:

காஷ்மீர் மக்களை புறக்கணியுங்கள் என்று டிவிட் போட்ட மேகாலயா ஆளுநருக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  காஷ்மீர் மாநிலம் இந்தியா வில்தானே உள்ளது, காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவில் இடமில்லையா? என்று மோடி அரசுக்கு ப.சிதம்பரம் காட்டமாக  கேள்வி எழுப்பி உள்ளார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முக்தி, உமர் அப்துல்லா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தற்கொலைப்படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல்சிதறி பலியானர் கள். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வுக்கு அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்,   மேகாலயா ஆளுநர் காஷ்மீர் செல்வதை தவிருங்கள் என்றும், காஷ்மீர் பொருட்களையும் புறக்கணியுங்கள் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புல்வாமா தாக்குதல் காரணமாக, மாநில ஆளுநர் தடாகதா ராய் தனது டிவிட்டர் பக்கத்தில்,  காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம், காஷ்மீரில் தயாரிக்கப் படும் ஷால் போன்ற வணிக ரீதியிலான  பொருட்களை புறக்கணியுங்கள் என்றும், இன்னும் இரண்டு ஆண்டுகள் அமர்நாத் யாத்திரையை  தவிருங்கள்  என்றும் பதிவிட்டிருந்தார். இது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாட்டின் மதிப்புமிக்க உயர்ந்த பகுதியில் உள்ள ஆளுநரே, இதுபோல டிவிட் பதிவிட்டதை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக கண்டித்து உள்ளனர்.

பாஜகவில் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் பலர், அரசியல் சாச னம் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மறந்து, தன்னிச்சை யாக அரசியல் கட்சியினர் போல நடந்து கொள்கின்றனர். தங்களது பதவிக்கான மரியாதையை அளிக்காமல், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், மாநில அரசின் நிர்வாகங்களில் தேவையின்றி தலையிட்டு பரபரப்பை ஏற்படுத்து வதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே டில்லி கவர்னர், காஷ்மீர் கவர்னர், புதுச்சேரி கவர்னர் என பல கவர்னர் கள் தங்களது அதிகாரங்களை மீறி செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மேகாலயா கவர்னரும் தனது பதவி என்ன என்பதை மறந்து சாதாரண அரசியல் கட்சி தொண்டனை போல டிவிட்டரில் பதிவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேகாலாயா ஆளுநரின் சர்ச்சைக்குரிய டிவிட் குறித்து கருத்துதெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்,  நாட்டில் ஒற்றுமைக்கான சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் காஷ்மீர் மக்களுக்கு இடமில்லை என்று பாஜக ஆதரவாளர்களான மேகாலயா கவர்னர் போன்றோர் நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின்  நிலை அசியல் சாசனத்துக்கு  முரண்பாடாக உள்ளது.

காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம், ஆனால் காஷ்மீர் மக்கள் இந்தியாவின் பகுதியாக இருக்க அவர்கள்  விரும்பவில்லை என்று கூறி உள்ளார்.

மேகாலயா ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா, எங்கள் நதியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவீர்களா? என டிவீட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே நாடு முழுவதும் பசு வதைக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல்களில் ஈடுபட்டபோது பிரதமர் மோடி வாய் மூடி மவுனியாக இருந்தது போலவே, தற்போது புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் நடை பெற்று வரும் பல்வேறு சம்பவங்கள் குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.