டில்லி
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விதி எண் 370ல் திருத்தம் செய்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பாஜக அமைச்சரவையின் இறுதிக் கூட்டம் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் நடந்தது. இதில் பாஜக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370ல் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள்து.
அரசியலமைப்பு சட்ட விதி எண் 370ன் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ் அம்மாநிலத்துக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த விதியில் திருத்தங்கள் செய்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளன.
மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதல் ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இந்த திருத்தங்கள் சட்டபூர்வமாக அமுலாக்கப்படும்.