சென்னை:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழக அரசு சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
முதல் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை 177.25 டி.எம்.சியாக குறைத்து, அதை பெங்களுருக்கு வழங்கும் வகையில் தீர்ப்பு கூறியது.
இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை காலை 10.30 மணியளவில் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த2 நாட்களாக சட்ட ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.