
ஆளும்தரப்பினர், காவல்துறையினரை ஏவல் துறையினராக நடத்துகிறார்கள் என்ற புகார் பல காலமாகவே உண்டு. உயர் (!) பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. சாதாரண பதவியில் இருப்பவர்கள்கூட, காவல் துறையினரிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இந்த ஆடியோ!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் உரிய அனுமதியின்றி பேனர் வைத்தனர். போக்குவரத்து இடையூராக இருந்த இந்த பேனர்களை களியக்காவிளை காவல் ஆய்வாளர் சாம்சன் அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆய்வாளர் சாம்சனை மொபைலில் தொடர்கொண்டு மிரட்டலாக பேசியிருக்கிறார்
களியக்காவிளை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உதயகுமார்.

அந்த பேச்சின் ஆடியோதான் இப்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த ஆடியோ…
Patrikai.com official YouTube Channel