சென்னை:
தலித் இளைஞர் கோகுல்ராஜ், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தலைமறைவாக இருந்த போது வாட்ஸ்அப்பில் தனது பேச்சுக்களில் போலீஸ் டார்ச்சர் பற்றி பேசிவந்தார்.
“காவல்துறையினர் எனது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் சொல்லிவந்தார்.
இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொள்ள, உயரதிகாரிகள் டார்ச்சரால்தான் இந்த முடிவை அவர் எடுத்தார் என்று பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டது. யுவராஜும் இதையே சொன்னார்.
ஆனால் அவர் சரணடைந்த பிறகு அவரது ஆதரவாளர்கள் காவல்துறைக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள். முகநூல் உட்பட சமூகவலைதளங்களில், “சரணடையவரும் எங்கள் புலியை பிடிக்க ஏகப்பட்ட செக்போஸ்ட் வைத்தீர்களே காவல் துறையினரே.. ஆனால் எங்கள் தங்கத்தை பிடிக்க துப்பு இல்லையே உங்களுக்கு…” என்றும், “யுவராஜ் ஒரு சிங்கம். ஆயிரம் எலிகள் சேர்ந்தாலும் பிடிக்க முடியுமா” என்று காவல்துறையினரை எலிகளாக சித்தரித்தும் யுவராஜ் ஆதரவாளர்கள் பலர் பதிவிடுகிறார்கள். “யுவராஜை துன்புறுத்தினால், கலவரம் வெடிக்கும்” என்று காவல்துறைக்கு எச்சரிக்கை டார்ச்சரும் கொடுத்துவருகிறார்கள்.
இவர்களில் பலர் தமிழ்க்கொலை செய்து, தமிழுக்கும் டார்ச்சர் கொடுப்பது கூடுதல் வேதனை. இதற்கு உதாரணம், ஈரோடு கொங்கு செல்வா என்பவர். யுவராஜின் படத்தை தனது முகநூலின் முகப்பு படமாக வைத்திருக்கும் இவர் எழுதியிருக்கும் ஒரு பதிவு, “ காவல்துறை அவர்கலுக்கு ஒரு சிரு வின்னப்பம்” என்று ஏகப்பட்ட தமிழ்க்கொலையோடு துவங்குகிறது.
யுவராஜ் ஆதரவாளர்கள் எழுதும் பதிவுகளின் சாராம்சம், “தனி ஒரு மனிதனான யுவராஜை பிடிக்க துப்பில்லாத காவல்துறையே.. தானாக சரணடைந்த அவரை துன்புறுத்தாதே.,. அப்படி நடந்தால்..” என்பதுதான்.
“நூறு நாட்களுக்கு மேல் யுவராஜ் தலைமறைவாக இருந்ததே காவல்துறைக்கு அவமானம் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கையில், சரணடைய வந்தவரையும் பிடிக்க முடியாமல், தற்போது யுவராஜ் ஆதரவாளர்களிடமும் ஏச்சு வாங்கி டார்ச்சர் அனுபவிக்கும் நிலைக்கு போய்விட்டது தமிழக காவல்துறை!” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர்.
“