
சென்னையில் இருக்கிற ஸ்டுடியோக்கள் எல்லாமே அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது. சினிமாக்காரர்கள் படப்பிடிப்பு நடத்த ஸ்டுடியோக்கள் இல்லாமல் அலாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலமாக ஆரம்பிக்கப்பட்டது தான் ஆத்தியா ராம் ஸ்டுடியோஸ்.
பட அதிபரான ஆதித்யா ராம் ஈ.சி ஆர் ரோட்டில் ஆரபித்த இந்த இடத்தில்தான் தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், புலி உட்பட பல படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்போது கார்த்தி – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் காஸ்மோரா படத்தின் படப்பிடிப்பு ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில்தான் முதன் முதலாக கார்த்தியும் நயனும் ஜோடி சேருகிறார்கள்.
இதெல்லாம் நல்ல செய்திகள்.. அதே நேரத்தில் இன்னொரு பொல்லாத செய்தியும் பரவி வருகிறது. அதாவது “கொரிய படம் ஒன்றின் அப்பட்டமான காப்பிதான் இந்தப்படம்” என்று பரப்பிவருகிறார்கள் சிலர்.
Patrikai.com official YouTube Channel