1
ஆப்கானிஸ்தான்  நாட்டின் தலைநகர் காபூலில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் பலியானார்கள். இதை அந்நாட்டு அதிபர்  அஷ்ரஃப் கானி  உறுதிப்படுத்தி உள்ளார்.
தலைநகர் காபூலில் உள்ள அரசு  புலனாய்வுத் தலைமையகத்துக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றில்  ஆகியம் தாங்கிய பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென புகுந்துள்ளனர்.
அவர்கள் வெடிக்கச் செய்த குண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்தன. கட்டிடங்கள் தகர்ந்தன. இதில் பலர் உயிரிழந்தார்கள்.
தாக்குதலுக்கு உள்ளான இடம் இப்போது பாதுகாப்பு படையினரால் முழுவதுமாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த பலர், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களல் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். ஆகவே பலி எண்ணிக்கை கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியதாக தகவல் பரவியது. ஆனால் இத் தாக்குதலுக்கு தற்போது தாலிபன் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
அந்த பயங்கரவாத இயக்கத்தின் சார்பாக அனுப்பப்பட்ட செய்தியில், “வரும் காலங்களில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.