0
சென்னை:
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. அதன் முதல் கட்டமாக,  சென்னை மேற்கு மாம்பலத்தில்  அக்கட்சியின்  தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
செஞ்சி ராஜேந்திரன் தலைமையில் நடந்த இக் கூட்டத்திற்கு கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.   இதனால் கூட்டம் நடந்த இடத்துக்கு தியாகராஜனின் ஆதரவாளர்கள் வந்தனர்.  அங்கிருந்த இளங்கோவன் ஆதரவாளர்களுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் கைகலப்பானது.  இதையடுத்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.