நாயகியின் fake id யில் நாயகனுடன் chat செய்கிறாள் ஸ்ரீ.
” இந்த id pass வேர்டு அதுக்கு தெரியுமா ராசாத்தி ” நாயகன் கேட்க ” ம்… தெரியும் ”
” அப்பறம் இதுல chat பண்ற அது பார்க்காதா !? வேற id open பண்ணு ”
” அப்படி பண்ணினா எங்க aundi கண்டுபிடிசிடுமே ”
” அதான் அவங்கள block பண்ணிட்டேனே எப்படி தெரியும் ? Sanjana San id ல நானும் அதுவும் மட்டும் frds so ஈசியா கண்டுபிடிக்க முடிந்தது. புது id ல யாரையாவது கொஞ்சம் add பண்ணிக்கோ அப்போ தெரியாது இந்த id வேண்டாம் ராசாத்தி…” நாயகனின் அறிவுரை படி புது id open பண்றா ஸ்ரீ. உயிர் தோழியான நாயகியிடம் சொல்லாமல் மறைக்கிறாள். ஸ்ரீயிடம் பாஸ் வேர்டு கொடுக்கும் நாயகியோ இந்த idயை சுத்தமாக மறந்து போகிறாள்.
Sri vidhya என்ற பெயரில் ஐடி ஆரம்பித்து ஸ்ரீ நாயகனுடம் நெருக்கத்தை உருவாக்குகிறாள்.
அபிநயாவை “ஓவர் பொசசிவ்”, “உன்னை நம்பல”, “என் பேரை கெடுத்துட்ட” அப்படி இப்படின்னு பல காரணங்களை சொல்லி கழட்டிவிட பார்க்கிறான் நாயகன் தேவை முடிந்ததால். அது புரியாத அபிநயா இருவருக்குள்ளும் நடக்கும் ஒரு விவாதத்தில் “என்னை மட்டும் சொல்ற உன் பேரை கெடுத்தேன்னு. உன்னோட best friend நீயே சொன்ன அவங்களும் தானே உன்னை பத்தி சொன்னாங்க ன்னு நாயகியை போட்டு கொடுக்க, நாயகன் கடுப்பாகிறான் நாயகி மேல்.
நாயகன் பிளாக் பண்ணியதால் பேசமுடியாத பத்மினி கோவம் மொத்தத்தையும் நாயகிமேல் காட்டுகிறாள் எல்லோரிடமும் நாயகியை தப்பாக வதந்தியை பரப்புகிறாள். அடையாள படுத்துவதும் எளிதாகிறது பத்மினிக்கு நாயகியின் எழுத்தை கொண்டே அவளை எளிதாய் அடையாள படுத்துகிறாள் பத்மினி.
இந்த நிலையில் நாயகனின் ஒரு ஸ்டேட்ஸ்” முகநூல் ” என்று ஆரம்பிக்கும் ஒரு பதிவில் கீழ்த்தரமான பெண்கள் பற்றி எழுதுகிறார் நாயகன் யோக்கியன் போல, பத்மினி பரப்பிய வதந்தி நாயகனின் யோக்கிய வேஷம் இரண்டும் நாயகியை குறிவைக்கிறது.
இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் call பண்ணி சொல்லித்தான் நாயகிக்கு அப்படி ஒரு ஸ்டேட்ஸ் வந்திருப்பது தெரிகிறது.
எப்பவும் போல் அந்த பதிவிற்கும் எதார்த்தமாக கமென்ட் பண்ணிட்டு வரும் நாயகிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருகிறது inbox ல்.
(தொடர்ச்சி..வரும் சனிக்கிழமை..)