24

ஸ்ரீயின் வார்த்தைகளையோ, பத்மினியின் பிதற்றல்களையோ பெரிய விஷயமாய் நினைக்காமல் நாயகி எப்போதும் போல கவிதை எழுதுவது post, கமென்ட் என அவளாக இருக்கிறாள்.
நாயகனோடு பேசுவதை குறைந்திருந்தாலும் அவ்வப்போது ஒரு ஹாய்,bye நிலையில் இருக்க.
ஒரு msg நாயகனிடம் இருந்து.
“அபியும் நீயும் பீச் ல meet பண்ணினீங்களா !?”
“ஆமா உனக்கு எப்படி தெரியும் ?”
“எப்படியோ… தெரியும் நீ வரசொன்னியா !? அவங்க வரசொன்னான்களா !?”
“அவங்க தான்”
” என்ன சொன்னாங்க ?”
“என்னமோ சொன்னாங்க விடு எதுக்கு இந்த பேசு ” என்று msg ல பேசிகிட்டு இருக்க அதே நேரம் அபிநயா ஒரு open post ல நான் fb விட்டு போறேன் யாராவது இருந்தால் பேசுங்க ன்னு ஒரு ஸ்டேடஸ் போடுறாங்க.
ஏதோ தப்பா இருக்க அபிநயா கிட்டயும் நாயகன் கிட்டயும் மாறி மாறி msg பண்றாள் நாயகி அபி கிட்ட கேக்குற
“என்னாச்சு ”
அபியிடம் சரியான பதில் இல்லை. தன்னிடம் பீச்ல meet பண்ணியதை சொல்லவேண்டாம்னு சொல்லிட்டு அபி சொல்லிட்டதாய் நினைக்கும் நாயகி அபிக்கு msg ல
“நல்லா game ஆடிட்டிங்க அபி ” என்கிறாள்.
“அபியோ யாரு game ஆடீனது நீங்களா நானா” என்று கேட்க.
“என்ன அபி நீங்க என்ன சொல்லவேண்டன்னு சொல்லிடு நீங்க நீங்க சொல்லியிருக்கிங்க.”
“அய்யோ சத்தியமா நான் சொல்லல call பண்ணுங்க ” என்கிறாள் அபிநயா.

இந்த குழப்பத்திற்கு இடையில் நாயகன் msg ல.
“நான் கேட்ட நீ சொல்லிருவன்னு நினைச்சேன் ”
” என்ன சொல்ல சொல்ற ?”

“பத்மினி அவன் கிட்ட ஜாக்கரதையா இருன்னு ஸ்ரீ கிட்ட சொன்னதும் நீயும் என் வலையில் விழாம விலக நினைச்சுட்டல…”என்று பரிதாபமாக பேச நாயகி
“loosu மாதிரி பேசாத ! அவங்க சொல்லித்தான் எனக்கு தெரியனுமா !? எனக்கு சுயபுத்தி இல்லையா ” என்று கேட்கிறாள்.

நாயகன் மிகுந்த மன வலியோடு பேசுவது போல் பேச இதற்கு காரணம் அபிநயா என நினைத்து call பண்றா நாயகி.
இரண்டு மணிநேர பேச்சில் இருவரும் சொல்லவில்லை என்பது உறுதியாக இருவரை தவிர யார் சொன்னது என்று நாயகி குழம்புகிறாள்.

பத்மினியோ 24/7 முழுவதும் நாயகனின் டைம் லைனை நோண்டுவதும் அதில் இருக்கும் பெண்கள் லிஸ்ட் எடுத்து ஆராய்ச்சி பண்ணுவது அதை பற்றி சிலரோடு பேசி விசாரிப்பது என்று CID வேலை பார்க்க, நாயகன் காதலிகள் லிஸ்ட் நீளுகிறது பத்மினிக்கு. ஸ்ரீயிடம் சொல்கிறார். ரொம்ப தப்பா இருக்கு அவனோட பேசாதன்னு சொல்கிறார். ஆனால் ஸ்ரீயோ நாயகன் மேல் இருந்த ஈர்ப்பில் சொந்த aunty பேச்சை கேட்க தயாராய் இல்லை.

பத்மினி தாய் ஸ்தானத்தில் இருக்கும் தன்னை மதிக்காததால் விஷயத்தை ஸ்ரீயின் தாயாரிடமே எடுத்து செல்கிறார்.

Fb னா என்னவென்று கூட தெரியாத ஸ்ரீயின் அம்மா பத்மினியின் பேச்சை கேட்டு மகளிடம் நாயகனை block பண்ண சொல்லி அழுகிறார் எங்கே பொண்ணோட வாழ்க்கை வீணாகி விடுமோ என்று பயப்பட தாயின் பேச்சை தட்டமுடியாமல் நாயகனை block பண்ணுகிறாள் ஸ்ரீ. தோழியான நாயகிக்கு போன் பண்ணி
“எங்க இருக்க?”
“வெளிய இருக்கேன் ஸ்ரீ என்ன சொல்லு !”
“வீட்டுக்கு வா சொல்றேன்” ஸ்ரீயின் குரல் உடைந்திருப்பதை உணரும் நாயகி
“என்ன ஸ்ரீ அதுவும் பிரச்சனையா ?” என்று கேட்க
“நீ சிக்கிரம் வா pls ”
இதற்கு மேல் பேசினால் அழுதுவிடுவாள் என்று தோன்ற நாயகி வேலை முடிந்ததும் நேரா ஸ்ரீ வீட்டுக்கு போறா அங்கே ஒரு அதிர்ச்சி அவளுக்கு காத்திருப்பது தெரியாமல்.

 

(அடுத்த அத்தியாயம்… வரும் திங்கட் கிழமை..)