l

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :31:  உமையாள்

டற்கரைக்கு போனது ஸ்ரீ க்கு மட்டும் தான் தெரியும்…!. அபிநயா சொல்லியிருக்க வாய்ப்பு இல்ல காரணம் அவங்களே சொல்லவேண்டான்னு சொல்லியிருந்தது, அப்படியே சொன்னாலும் பாதிப்பு அபிநயாவுக்கு தான் காரணம் அவங்க தான் வர சொன்னதே… மேலும் சந்தேகப்பட்டு கேட்டபோ அபி பேசிய விதத்தில் அவங்க சொல்லியிருக்க முடியாது. So ஸ்ரீ சொல்லியிருப்பாளா. முதல்முறையாக தோழி மேல் சந்தோகம் வருகிறது நாயகிக்கு.

மேலும் ஸ்ரீயின் நடவடிக்கை, நாயகனின் கோபம் என எல்லாம் ஸ்ரீ மேல் எழுந்த சந்தோகத்தை அதிகப்படுத்த ஸ்ரீ யிடமே கேட்டுவிட முடிவெடுக்கிறாள் நாயகி.

“ஸ்ரீ உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் உண்மைய சொல்லு pls ” நாயகி ஆரம்பிக்க.
” ஏ… என்ன ! கேளு சொல்றேன்…”
” நா beach ல அபிய meet பண்ணினதை நீ அவன் கிட்ட சொன்னீயா ?”
” இல்ல…” சற்று அதிர்ச்சியாக.
” நல்ல யோசிச்சி சொல்லு ஸ்ரீ ” இந்த முறை சற்று அழுத்தமாக கேட்கிறாள் நாயகி. அதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீ.
” என்னாச்சி உனக்கு ! நான் அவன் கிட்ட சொல்லல… ஏ ஏதும் பிரச்சனையா…!”
” கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு போதும். வேற யார் கிட்ட சொன்ன ஸ்ரீ ” கொஞ்சம் கோவமாக கேட்கும் நாயகி பார்த்து.
” நான் யார்ட சொல்லபோறேன் சொல்லு ! ஏன் அபி கூட சொல்லியிருக்கலாமே!”
” அபி கிட்ட பேசிட்டேன் அவங்க சொல்ல வாய்ப்பேயில்ல. அவனை விடு உங்க aundy கிட்ட சொன்னீயா”
” இல்ல நா சொல்லல அபிய நம்புவ என்ன நம்ப மாட்டியா? ” என கேட்கும் ஸ்ரீயின் வார்த்தைகளில் மீண்டும் கரைகிறாள் நாயகி.
” இல்ல அந்த அபிநயாவ மீட் பண்ணினதுக்கு அப்பறம் அவனோட attitude மாறியிருக்கு அவனோட ஸ்டேடஸ் பார்த்தியா !? அதை பத்தி கேட்ட சரியா பதில் சொல்ல மட்டேன்ரான். ஒருத்தர் இது நீங்களான்னு கேக்குறார். ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ… என்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியல உடம்பும் பிரச்சனை பண்ணுது, வீட்லயும் பிரச்சன, இவன் தான் ஆறுதலா      இருந்தான் இப்போ இவனும் முடில ஸ்ரீ …” மொத்தமாக புலம்பி கொட்டுகிறாள் நாயகி.
எல்லாம் கேட்கும் ஸ்ரீ நாயகியின் முகத்தை பார்க்காமல் ” நா எதும் சொல்லல ” என்று மட்டும் சொல்கிறாள்.
” Sorry ஸ்ரீ உன்னை hurt பண்ணிட்டேன். ”
” பரவாயில்ல விடு ”
” அப்ப கூட நா அபி கிட்ட என்ன தப்பா சொன்னேன். இவன் ஏன் இவ்வளவு கோவமா இருக்கான் ! ஒன்னும் புரியல… ”
” சரி டென்சன் ஆகாத சரியாகிடும் விடு ” பேசிக்கொண்டிருக்கும் போதே ஸ்ரீ க்கு நாயகனிடம் இருந்து call வருது.
” யாரு ஸ்ரீ !”
” பேசு பேசு என்னதான் பிரச்சனைன்னு கேளு அவன்கிட்ட ”  ஸ்ரீ call அட்டன் பண்ணி பேசுகிறாள்.
நாயகி ஸ்ரீயிடம் கேட்க சொல்கிறாள் செய்கையில். வேறு வழியில்லாமல் தயங்கி தயங்கி ஸ்ரீ கேட்க நாயகி டக்குனு போனை வாங்கி ஸ்பீகர் போட நாயகன் உண்மையை சொல்லிவிடுகிறான்.
” நீதானே ராசாத்தி சொன்ன ”
” நானா சொன்னேன் !? ” நாயகி கோவமாக முறைப்பதை பார்த்துக்கொண்டே ஸ்ரீ கேட்க மீண்டும்
” ஆமா ஸ்ரீ நீ சொல்லித்தான் தெரியும் அவங்க ரெண்டுபேரும் மீட் பண்ணினது. ஏன் கேக்குற ” இருவரும் பேசும் எதையும் காதில் வாங்காமல் நாயகி வெளியேறும் நாயகியை பார்த்து கத்துகிறாள் ஸ்ரீ
” Oye நில்லு போகாத என்னால எழுந்து வரமுடியாது நில்லு லூசு ” எதையும் காதில் வாங்க தயார்ராக இல்லை நாயகி.
ஏனோ எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல் நாயகி இருக்கிறாள். நாயகனையும், ஸ்ரீயையும் தவிர்க்கிறாள். ஸ்ரீயிடம் எதுவும் கேட்காமல் அவளை நாயகி தவிர்ப்பது ஸ்ரீ உறுத்தலை உண்டு பண்ண நாயகிக்கு call பண்ற ஸ்ரீ.
” எங்க இருக்க ” குரலில் ஒரு வருத்தம் இருப்பதை உணரும் நாயகி.
” வீட்ல இருக்கேன் என்ன சொல்லு ” அமைதியாகவே பதில் சொல்கிறாள் நாயகி.
” என்ன செய்ற… ?”
” தூங்க போறேன் ஸ்ரீ ”
” இங்க வரலாம் ல…”
” …………” நாயகியின் அமைதி மேலும் ஸ்ரீயை தடுமாற செய்ய.
” என்ன அமைதியா இருக்க ? வா இங்க…”
” தூக்கம் வருது ஸ்ரீ…”
” ஏன் இங்க வந்து தூங்கு. நானும் தனியா தானே இருக்கேன்.”
” இல்ல ஸ்ரீ பரவாயில்ல ” நாயகி அவாய்ட் பண்ணுவதை புரிந்து கொள்ளும் ஸ்ரீ.
” Sorry… நா அவன் கிட்ட எப்போ சொன்னேனே தெரியல…”என்று இழுக்க.
” அவனே சொன்னானே நீயும் தானே கேட்ட !”
” ஆமா நான் தான் சொல்லியிருக்கேன் இல்லன்னு சொல்லல எப்போ சொன்னேனே நியாபகம் இல்ல… ரொம்ப ரொம்ப sorry pls…”
ஸ்ரீயின் Sorry, வருத்தம் அவளின் நீண்ட நாளைய நட்பு எல்லாம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
மீண்டும் ஒரு msg வருகிறது நாயகிக்கு…

( தொடர்ச்சி.. வரும் திங்கட்கிழமை..)