மும்பை:

கரும்பு விவசாயிகளை நிதி நெருக்கடியிலிருந்து மீட்காவிட்டால், பெரும் புரட்சி வெடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் எச்சரித்துள்ளார்.

 முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத்பவார், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;
நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மனச் சோர்வும், அமைதியின்மையும் அடைந்துள்ளனர்.
கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். விவசாயிகள் மத்தியில் பெரிய அளவில் புரட்சி வெடிக்கும் முன்பே, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. இதுவே சமீபத்திய பாஜக தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடிக்கு இந்த கடிதத்தை சரத்பவார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.