12108226_1663512900605059_8840515334617498544_n

டந்த செப்டம்பர் முப்பதோடு கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு கடைசி நாள். அனால் அந்த முயற்சி வெற்றிபெற்றதா என்பது கேள்வி குறி . மிகவும் குறைந்த அளவிலேயே ஏறத்தாழ நாலாயிரம் கோடிவரைதான் கருப்பு பணம் பிடிபட்டுள்ளது. மீதமுள்ள பெருந்தொகை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஏனோதானோ என்ற நிலையில்தான் உள்ளது. ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது, கருப்பு பணத்தை கைப்பற்றுவதை விட, மேலும் கருப்பு பணத்தின் உருவாக்கத்தை தடை செய்வதே சிறந்த செயலாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் பணம் பதுக்கபட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் ஐம்பத்துநாலாயிரம் பேர் குடியிருக்கும் கேமன் தீவில் மட்டும் கருப்பு பணம் வகையில் சுமார் எண்பத்து ஐந்தாயிரம் கொடிகள் பதுக்கபட்டுள்ளது. இப்படி சின்ன சின்ன தீவுகள் மட்டுமல்லாமல் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்குவது இந்திய அரசிற்கு தெரிந்திருந்தும், இந்த விஷயத்தில் ஆமை வேகத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனையை கையில் எடுதிருப்பதால்தான் இந்த அளவாது விவாதத்தில் இருகின்றது.

பீ நோட்ஸ் என்கிற வகையில் அதை முதலீடு செய்கின்றவர்கள் யாரென்று கூட தெரியாமல் அளவில்லா தொகயை பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முறையை இந்திய அரசு 2008லேயே தடை செய்யும் என்று எதிர்பார்த்தும் பெரும் கேடான இத்திட்டத்தை மத்திய அரசு தடை செய்யாமலிருப்பதின் நோக்கமென்ன…

காங்கிரஸ் ஆனாலும் பாஜக ஆனாலும் கருப்பு பண பிரச்சனையை கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறது. மோடி பிரதமவராவதற்கு முன் தனது தேர்தல் பிராச்சாரத்தில் கருப்பு பணத்தை மீட்போம்ன்னு சொன்ன உறுதிமொழிக்கு ஏற்றவாறு செயல்படவும் இல்லை. ஒப்புக்கு ஒரு பட்டியலை தந்துவிட்டு தொண்ணூறு சதவிகிதம் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அறிந்து வெளியிடாமல் மத்திய அரசு மௌனம் சாதித்துக்கொண்டுதான் வருகிறது .

உச்ச நீதிமன்றம்தான் இதை கவனிக்க வேண்டும்!

  • கே.எஸ்.ராதாகிருஷ்ணன்