டெல்லி, 

மத்திய. அரசின் கருப்புப் பணத்தை வெளியிடும் திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  இதன்மூலம்எதிர்பார்க்கப் பட்டதிலிருந்து 50 சதவிதத்துக்கும் கீழ்தான் வரிப்பணம் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மணி க்ன்ட்ரோல் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் இதை தெரிவித்தார்.

மேலும் அவர்,  கருப்பு பணத்தை வெளியிடும் திட்டம்மூலம் மார்ச் 31 ம் தேதி வரை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த தொகை பிரதமரின் ஏழை மக்கள் நலதிட்டத்திற்காக செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால் 50 சதவிதத்துக்கம் கீழ்தான் வரிவருவாய் நடந்திருப்பதாகவும், இனி 25000 கோடி ரூபாய் வரிவருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் வங்கியில் முதலீடு செய்ய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறினார். அதாவது செப்டம்பர் 31 வரை காலக் கெடு தரவேண்டும் என்று அவர்கள் கோரியிருப்பதாகவும் கூறினார்.

பிரதமரின் ஏழை நலன் திட்டம் என்பது கணக்கில் வராத கருப்புப் பணத்துக்கு அந்தத் தொகையின் மதிப்பில் 50 சதவித வருமான வரியுடன், மேலும் 25 சதவித வருமானவரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பணம் பிரதமரின் ஏழை நலன்களுக்கான திட்டத்தில் 4 ஆண்டுகள் வட்டி இல்லாத பணமாக முதலீடு செய்யப்படும்.

கடந்த புதன்கிழமை மக்களவையில் பேசிய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 18 லட்சம் பேரின் வருமானத்துக்கும், அவர்களது வங்கி முதலீட்டுக்கும் தொடர்பே இல்லை என்று கூறினார்.

எஸ்எம் எஸ், இமெயில்  மூலம் அவர்களிடம்  விளக்கம்  கேட்கப்பட்டுள்ளது. இவர்களில் 8.71 சதவிதத்தினர்தான் பதில் அளித்திருப்பதாகவும் எஞ்சியவர்கள் மீது வருமானவரி சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.