fire
முதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் அனல் மின் நிலையத்தில் கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில்  ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே, தீ விபத்து குறித்து பலவித சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அதானி குழுமம் சார்பில் சோலார் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சோலார் அனல் மின் நிலையத்தில் கடந்த 12ம் தேதி, வெள்ளிக்கிழமை பகலில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது.  இதில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக, அந் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
சோலார் அனல் மின் நிலையத்தில் பாதுகாப்பான வசதிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், திடீரென எப்டி தீப்பற்றியது என்று, நிறுவன ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இன்னொரு தகவலும் உலவுகிறது.
“இதே அதானி குழுமம், மற்ற மாநிலங்களில் யூனிட் ஆறு ரூபாய் என்று மின்சாரத்தை விற்பனை செய்கிறது. ஆனால் தமிழகத்தில் யூனிட் மின்சாரம், ஏழு ரூபாய் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, வரும் மார்ச் 31ம் தேதியில் இருந்து மின்சாரம் அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் யூனிட் மின்சாரம் ஆறு ரூபாய்க்குத்தான் வாங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் இருக்கிறதாம்.
இந்த நிலையில்,  சோலார் அனல் மின் நிலைய பணிகள் முழுமையடையவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணி நிறைவடையுமா என்கிற நிலை. இந்த சூழலில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன” என்கிறார்கள்.