kam
கமல் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமல்ல, கவிஞரும்கூட!

1996-ம் ஆண்டு, சேலம் மாவட்டத்தில், தனம் என்ற தாழ்த்தப்பட்ட சிறுமியை, அவளது பள்ளி ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் பார்வையை இழந்தாள் அந்த சிறுமி.

சிறுமி தனத்தின் கண் சிகிச்சைக்கு 10000 ரூபாய் நிதி உதவி அளித்தார் கமல். அதோடு, அந்த தாழ்த்தப்பட்ட சிறுமியின் அவலநிலையை உணர்த்தும், வகையில் கமல் எழுதிய கவிதை இது.

நாளை அவரது பிறந்தாளை முன்னிட்டு, அந்த கவிதை…

 

“தமிழ் மகளே

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாது இந்த சாதி சுரம்

கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !

காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !

ஓசையும் பூசையும் பார்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !

சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !

சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !

புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண் !”