
ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் எதிர்பார்ப்பு வழக்கம் போல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பா.ரஞ்சித் படத்தை இயக்கும் விதத்தை ரஜினி ரொம்பவே ரசிக்கிறாராம். “உங்க ஸ்பீடும் என் ஸ்பீடும் நல்லா மேட்ச் ஆகுது” என்று ரஞ்சித்தை பாராட்டி இருக்கிறார் ரஜினி.
படப்பிடிப்புக்காக முதல்முறை மலேசியா சென்றபோதே ரஜினியை சந்திக்க மிகவும் ஆர்வம் காட்டினார்கள் மலேசிய ரசிகர்கள். அவர்களது ஆர்வத்துக்கு அணைபோட வேண்டாம் என்று, படப்பிடிப்பு தளத்தில் கெடுபிடிகள் குறைக்கப்பட்டன.

ஆனால், படப்பிடிப்பு காட்சிகளை ஆர்வத்தில் சிலர் கேமரா செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பரவவிட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. படப்பிடிப்பு ஆட்களைத் தவிர, மிகச் சில ஆட்கள் மட்டுமே தளத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும், கேமரா இருக்கிறதா என்று தீவிரமாக சோதனை செய்த பிறகுதான் அனுமதி!
மறுபடி ரஜினி மலேசியா சென்ற நிலையில் இந்த கெடுபிடி தொடரவே செய்தாலும், அவ்வப்போது ரசிகர்களையும் சந்தித்துவருகிறார் ரஜினி. ரசிகர்களும் ஆர்வத்துடன் ரஜினியை படம் எடுக்கிறார்கள்.
இதோ கபாலி ரஜினியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
Patrikai.com official YouTube Channel